சுடச்சுட

    

    வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி:திறந்தவெளியில் அமர்ந்த மாணவிகள்

    By திருவள்ளூர்  |   Published on : 04th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய், புதன்கிழமைகளில் அறிவியல், கணித ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு காரணமாக மாணவிகள் திறந்த வெளியில், மண் தரையில் அமர வைக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் வி.எம். நகரில் இயங்கி வரும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல், கணித ஆசிரியர்களுக்கு "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு எளிய வழியில் கல்விக் கற்றல் குறித்த பயிற்சி வகுப்பு செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

    இந்தப் பயிற்சி வகுப்புக்காக அந்தப் பள்ளியில் 3 வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகள் கடந்த 2 தினங்களாக திறந்த வெளியில் அமர வைக்கப்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது.

    இதைப் பார்த்த பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற ஆசிரியர்களுக்கான கூட்டத்தை வேறு ஏதாவது கல்வித் துறை அலுவலகக் கூடங்களில் நடத்த வேண்டும்.

    இதுபோல் மாணவர்களை வெளியில் அமர வைப்பதால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன் மற்றவர்களின் பார்வைக்கும் காட்சிப் பொருளாக ஆகின்றனர் என ஆதங்கத்துடன்

    கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai