சுடச்சுட

    

    வங்கியில் பணம் போட வந்தவரிடம் நூதன முறையில் திருட்டு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 04th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வங்கியில் பணம் போட வந்தவரிடம் நூதன முறையில் 2 மர்ம நபர்கள் ரூ.13 ஆயிரத்தை புதன்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகரில் வசித்து வருபவர் பிரமோத்குமார் ஷர்மாவின் மகன் அஞ்சன்குமார் (31). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் வேலைப் பார்த்து வருகிறார்.

    வட இந்தியாவைச் சேர்ந்த இவர், சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்ப ரூ. 13 ஆயிரத்துடன் சிப்காட் பகுதியில் உள்ள வங்கிக்கு வந்துள்ளார்.

    அப்போது அவர் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்த இருவர், "தங்கள் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று இந்தியில் அவரிடம் கூறி, கைக்குட்டையால் சுற்றப்பட்ட கட்டை கொடுத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அஞ்சன்குமார் கொண்டு வந்த பணத்தை கீழே வைத்து விட்டு மர்ம நபர்களுக்கு உதவி செய்ய படிவத்தைப் பூர்த்தி செய்துக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவினர்.

    ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து அஞ்சன்குமார் அவர்களை தேடியபோது அவர்கள் காணாததால் அந்த கைக்குட்டை பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் ரூபாய் நோட்டு அளவில் காகிதங்கள் சுற்றப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai