சுடச்சுட

  

  பொன்னேரியில் செயல்பட்டு வரும் சார்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை அம்பத்தூரில் புதிதாக அமையவுள்ள நீதிமன்றத்துக்கு மாற்ற முயல்வதைக் கண்டித்து பொன்னேரியில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாவட்ட உரிமையியல், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

  இங்குள்ள சார்பு நீதிமன்றத்தில் திருவொற்றியூர், செங்குன்றம், சோழவரம், புழல் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குள் பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்படும்.

  இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் புதிதாக சார்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் திருவொற்றியூர், செங்குன்றம், புழல், சோழவரம் ஆகிய காவல் நிலைய எல்லைகுள்பட்ட வழக்குகள் அம்பத்தூரில் புதிதாக அமையவுள்ள சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன.

  இதையடுத்து மேற்கண்ட காவல் நிலைய எல்லைகுள்பட்ட வழக்குகளை எப்போதும் போல் பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில் நடத்த கோரியும், அந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கக் கோரியும் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து விட்டு காவல் நிலையம் எதிரே உள்ள சார்பு நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai