Enable Javscript for better performance
அனுப்பம்பட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு- Dinamani

சுடச்சுட

    

    அனுப்பம்பட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு

    By பொன்னேரி,  |   Published on : 05th September 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மொத்தம் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்த மகேந்திரன், உடல்நலக் குறைவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேல்தல் நடைபெறவுள்ளது.

    இதில் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சார்லஸ் (எ) உமா மகேஸ்வரன், கிருஷ்ணவேணி, மேகநாதன் ஆகியோர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான நர்மதாவிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக திங்கள்கிழமை சங்கர்ராஜா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai