சுடச்சுட

    

    ஆசிரியர் தினம்: பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்

    By திருவள்ளூர்,  |   Published on : 05th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் தினம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் அருகே இயங்கி வரும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, தாங்களே வடிவமைத்த பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தாஸ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் பள்ளியில் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி சாதாரண குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதியானது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை செய்வது குறித்தும், கீழ்படிந்து நடப்பது குறித்தும் கூறப்பட்டது.

    இதில் முக்கிய நிகழ்வாக மாணவர்கள் தங்கள் கையாலேயே வடிவமைத்த பூங்கொத்துகளை ஆசிரியர்களுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியின்போது தலைமை ஆசிரியர் தாஸ், சகுந்தலா, சவீதா, ராமன், நிவேதா, கோதண்டன், கோட்டீஸ்வரி, அனிதா உள்ளிட்ட ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai