சுடச்சுட

    

    இன்று தேசிய ஆதிதிராவிட நல ஆணைய உறுப்பினர் வருகை

    By திருவள்ளூர்  |   Published on : 05th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர் கமலம்மாள், உதவி இயக்குநர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் அமைப்புகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாட உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர் பி.எம். கமலம்மாள், உதவி இயக்குநர் ராமசாமி ஆகியோர் வந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மக்கள், அமைப்புகளுடன் கலந்துரையாட உள்ளனர்.

    எனவே, இந்த மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து ஆதிதிராவிடர் இன அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள், ஆதிதிராவிடர் அமைப்புகளைச் சார்ந்த தொண்டு நிறுவனத் தலைவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai