சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த திருவள்ளுவர் நகரில் உள்ள தாமரை ஏரியில் மூழ்கிய சிறுவன் உயிரிழந்தார்.

    கும்மிடிப்பூண்டி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவரின் பேரன் வினோத் (11).

    பெற்றோரை இழந்த வினோத், அவரது பாட்டி வீட்டில் வளர்ந்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட சென்றபோது காணாமல் போய்விட்டதால் கோவிந்தம்மாள் அவரை பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் வியாழக்கிழமை கும்மிடிப்பூண்டி திருவள்ளுவர் நகரில் உள்ள தாமரை ஏரியில் சிறுவன் ஒருவனின் உடல் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் கூறியதைத் தொடர்ந்து கோவிந்தம்மாள் அங்கு சென்ற பார்த்தபோது அது வினோத் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai