சுடச்சுட

  

  திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

  By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 05th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

  இந்த கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவர் வே.முத்துகுமரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கோ.மணிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் தீனதயாளன், சிராஜுதின், மனோகரன், லட்சுமி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இந்தக் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள வணிக பெருமக்கள், பொதுமக்களோடு இணைந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து பேரூராட்சியில் ஆலோசிக்கப்பட்டது.

  தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒவ்வொரு கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பைகளை தினமும் பெறும் முறையில் மக்கும் குப்பைகளை காலை 8 மணி முதலும், மக்காத குப்பைகளை மாலை 2 மணி முதலும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் கடைக்காரர்கள் ஒப்படைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

  தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்பு அனைத்து கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் பேரூராட்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai