சுடச்சுட

  

  திருத்தணி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? மக்கள் அச்சம்

  By திருத்தணி,  |   Published on : 05th September 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்தணி அருகே ஏரிக்கரையோரம் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடந்து சென்றதாக இளைஞர் தெரிவித்ததால், அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

  திருத்தணியை அடுத்துள்ளது வேலஞ்சேரி கிராமம். இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் நெல், கம்பு, கரும்பு போன்றவைகளை பயிர் செய்துள்ளனர்.

  இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காசிநாதபுரம், டி.வி.புரம் கிராமத்தின் வழியாக சிறுத்தைப் புலி, வேலஞ்சேரி கிராமத்துக்கு வந்ததாக கிராம முக்கியப் பிரமுகர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  பின்னர் வனத்துறையினர் வேலஞ்சேரி கிராமத்தில் ஆய்வு செய்து காலை முதல் மாலை வரை சிறுத்தைப் புலியை தேடினர். ஆனால் ஏதும் தென்படவில்லை.

  இந்நிலையில் வியாழக்கிழமை திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையோரம் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடந்துச் சென்றது. இதை அப்பகுதி இளைஞர் பார்த்துவிட்டு, அதன் கால் பதிந்த தடத்தை கைப்பேசி மூலம் படம் பிடித்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதியினர் திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து நான்கு வனவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

  பின்னர் இது சிறுத்தையின் கால் தடம் கிடையாது. எனவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தி சென்றனர். இதனால் திருத்தணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai