சுடச்சுட

    

    திருமணம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேர் மனு

    By பூந்தமல்லி,  |   Published on : 05th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமணம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 6 பேர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் வீரன்.

    இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து காலியாக உள்ள திருமணம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயராஜ், பாப்பு, முருகன், ரதி, சரவணன், ரவிக்குமார் ஆகிய 6 பேர் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள உதவித் தேர்தல் அலுவலர் கிருஷ்ணனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல பூந்தமல்லி ஒன்றியத்துக்குள்பட்ட சோராஞ்சேரி ஊராட்சியில் காலியாக உள்ள 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு உதவித் தேர்தல் அலுவலர் சத்தியமூர்த்தியிடம் வியாழக்கிழமை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai