சுடச்சுட

    

     கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் திருமண வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தவனம் (55). இவர் மகளின் திருமணம் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் புதன்கிழமை மாலை வீட்டை பூட்டிக் கொண்டு நந்தவனம், அவரது குடும்பத்தார் திருமண மண்டபத்துக்குச் சென்றனர்.

    தொடர்ந்து நள்ளிரவு நந்தவனத்திடம் வேலைப் பார்க்கும் சிவா (64) என்பவர் வீட்டுக்கு பின்னால் உள்ள மாடுகள் சரியாக கட்டப்பட்டிருக்கின்றனவா? என்று பார்க்க சென்றார். அப்போது பின்பக்கக் கதவு திறந்த நிலையில் உள்ளே ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்டு குரல் கொடுத்து அருகில் உள்ள ஆள்களை கூட்டி வரச் சென்றபோது உள்ளிருந்து மர்ம நபர்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்த நந்தவனம், அவரது வீட்டுக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அவரது வீட்டு பின்பக்கக் கதவை நெம்பி வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து நந்தவனம் அளித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் ஆய்வாளர் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai