சுடச்சுட

    

    நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சியைப் பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுரை

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 05th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரோக்கியமான வாழ்வைப் பெற இந்தக் காலத்து மாணவர்கள், படிக்கும் காலத்தில் இருந்தே தினமும் நடைப்பயிற்சியையும், பிரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என உலகப் புகழ்பெற்ற நடைப்பயிற்சியாளர் யோகேஷ் மதுரா தெரிவித்தார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற உடல்நலன் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு, கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் பிச்சைமணி, காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், உலகப் புகழ்பெற்ற நடைப்பயிற்சியாளரும், நடைப்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு நகரங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்பவரும், அமைதியை வலியுறுத்தி காந்தி ஜெயந்தி அன்று குஜராத்தில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு நடைப்பயிற்சி மேற்கொள்பவரான யோகேஷ் மதுரா பேசியது:

    உடல்நலக் குறைவு வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை தனி மனிதருக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படுத்துகிறது.

    நம் உடல்நலத்தைப் பேணி காக்க மூச்சுப் பயிற்சியான பிரணாயாமத்தை தினமும் பழக வேண்டும்.

    தினமும் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தூய்மையான தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும்.

    தினமும் 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட வேண்டும். நமது உணவில் 60 சதவீதம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உண்ண வேண்டும் என்றார்.

    கல்லூரி செயல் அலுவலர் பாபு நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai