சுடச்சுட

    

    போரூர் அருகே மௌலிவாக்கத்தில் நியாய விலைக் கடை ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒருவர் வியாழக்கிழமை சரணடைந்தார்.

    சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். காலனியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). மாற்றுத்திறனாளி. இவர் போரூர் அருகே மெüலிவாக்கம், ராஜகோபலபுரம் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் புதன்கிழமை மாலை தேவராஜ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (எ) ரேடியோ விஜி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai