Enable Javscript for better performance
பத்திரப் பதிவு செய்வதில் தாமதம்: பதிவு செய்ய வந்தவர்கள் தகராறு- Dinamani

சுடச்சுட

    

    பத்திரப் பதிவு செய்வதில் தாமதம்: பதிவு செய்ய வந்தவர்கள் தகராறு

    By திருவள்ளூர்,  |   Published on : 05th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினமும் நள்ளிரவு வரை பத்திரப் பதிவு நீளுவதையொட்டி, வியாழக்கிழமை மாலை நில உரிமையாளர்களும், நிலத் தரகர்களும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இங்கு திருவள்ளூர், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களின் வீட்டு மனைகள், வீடுகள் ஆகியவை விற்பதற்கும், வாங்குவதற்கும் பத்திரப் பதிவு நடைபெறுகிறது.

    தினமும் இந்த அலுவலகத்தில் சராசரியாக 150 முதல் 180 பத்திரப் பதிவுகள் நடைபெறுகின்றன.

    பொதுவாக, பத்திரப் பதிவு

    கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    ஆனால் திருவள்ளூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தினமும் நள்ளிரவு 11 மணி வரை நீளுவதாக கூறப்படுகிறது.

    மேலும் பத்திரப் பதிவுக்காக தங்களது ஆவணங்களை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு காத்திருக்கும் நபர்கள் தங்களது முறை வரும்போது உள்ளே சென்றால் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி சிறியப் பிழை இருந்தாலும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    இதனால் காலை முதல் காத்திருக்கும் நில உரிமையாளர்களும், தங்களுக்கு நிலம் விற்ற கமிஷன் தொகை இன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் நில புரோக்கர்களும் அதிருப்தியுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பத்திரப் பதிவு தொடர்பாக வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் காக்களூர் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எத்திராஜ் என்பவருக்கும் சார்பதிவாளர் ரவீந்திரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் நகர ஆய்வாளர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் இளங்கோ, போலீஸார் அங்கு சென்று அவர்களை சமரசப்படுத்தினர்.

    பின்னர் பத்திரப் பதிவுக்காக காத்திருந்தவர்களை வரிசைப்படுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai