சுடச்சுட

    

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ. 4 லட்சத்துக்கு ஏலம்

    By திருவள்ளூர்  |   Published on : 05th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 35 வாகனங்கள் ரூ. 4 லட்சத்து 22 ஆயிரத்து 505-க்கு ஏலம் விடப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் பல்வேறு கடத்தல் வழக்குகளில் கடந்த ஒரு ஆண்டில் 33 பைக்குகள், ஒரு ஆட்டோ, ஒரு மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 4-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்றும், ஏலத்தின்போது அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் போலீஸார் அறிவித்திருந்தனர்.

    அதன்படி திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையர் வரதராஜன், கூடுதல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை காலை ஏலம் விடப்பட்டது.

    திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 33 பைக்குகள், ஒரு ஆட்டோ, ஒரு மினி லாரி ஆகியன நிறுத்தப்பட்டன.

    இவை மொத்தம் ரூ. 4.22 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது மதுவிலக்கு துணைக் கண்காணிப்பாளர் செüந்தர்ராஜன், ஆய்வாளர்கள் புகழ், ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai