Enable Javscript for better performance
பூண்டி ஒன்றிய கவுன்சிலர் பதவி: அதிமுக - பாஜக நேரடி போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பூண்டி ஒன்றிய கவுன்சிலர் பதவி: அதிமுக - பாஜக நேரடி போட்டி

    By திருவள்ளூர்  |   Published on : 05th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக, பாஜகவினர் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 18-ஆம் தேதி உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 68 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 13 ஊராட்சி மன்றத் தலைவர், 53 வார்டு உறுப்பினர்கள், ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டு, பூண்டி ஒன்றியம் 14-ஆவது வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    மேற்கண்ட 68 பதவிகளுக்கு 162 பேரும், ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதையொட்டி திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த பாக்கியம் இறந்தார். இதையடுத்து தற்போது மாவட்டத் தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பாக்கியத்தின் மகள் சித்ரா புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதைத் தொடர்ந்து பாஜக சார்பில் திருப்பாச்சூரைச் சேர்ந்த வாசுதேவனின் மனைவியும், பூண்டி ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளரின் தாயாருமான தமிழரசி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவித் தேர்தல் அலுவலர் லட்சுமணனிடம் வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

    இதன் மூலம் அதிமுக - பாஜக நேரடி போட்டியாக களத்தில் இறங்கியுள்ளனர். வேட்பு மனு தாக்கலின்போது பாஜக மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் சுகுதேவ், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் வேலு, வழக்குரைஞர் பிரிவு செயலாளர் சண்முகம், பூண்டி ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai