சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தமிழக அரசின் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

    திருவள்ளூர் வட்டத்தில் மோவூர், நெய்வேலி கிராமங்களுக்கு மோவூர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்திலும், பூந்தமல்லி வட்டத்தில் பாணவேடுதோட்டம் கிராமத்துக்கு அப்பகுதி சமுதாயக் கூடத்திலும், பொன்னேரி வட்டத்தில் வள்ளூர்-1 கிராமத்துக்கு சுப்பாரெட்டிப் பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பாலவாக்கம் கிராமத்துக்கு அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலக வளாகத்திலும் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும்.

    மேலும் திருத்தணி வட்டத்தில் மத்தூர் கிராமத்துக்கு அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திலும், பள்ளிப்பட்டு வட்டத்தில் அய்யனேரி (கிழக்கு) கிராமத்துக்கு அய்யனேரி கிராம நிர்வாக அலுவலகத்துடன் இணைந்த சமுதாயக் கூடத்திலும் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai