சுடச்சுட

  

  சென்னை அம்பத்தூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது சரக்கு வேன் மோதியதில் அவர் அதே இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

  அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் கே.கே.நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (64). இவர் ஆவடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, ஆவடி சி.டி.எச். சாலையில் உள்ள பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் வள்ளியம்மாள் மீது மோதியது. இதில் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai