சுடச்சுட

  

  திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி லோகாத்தம்மன் ஆலயத்தில் 48 அடி உயரமுள்ள அம்மன் சிலையை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

  திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

  இந்த ஆலயத்தில் 48 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை அமைக்க கோயில் நிர்வாகத்தினரால் முடிவு செய்யப்பட்டது.

  இதற்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை காலை விழாக் குழுவினரின் தலைமையில் நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. ரமணா, திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் கந்தசாமி, கவுன்சிலர் சங்கர் ஆகியோர் பூமி பூஜைக்கு கல்லை எடுத்து வைத்து பணியைத் தொடங்கினர். சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகரம், டோல்கேட், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai