சுடச்சுட

    

    அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

    By திருத்தணி  |   Published on : 06th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை - திருப்பதி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில் திருத்தணியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கலைக் கல்லூரியில் செயல்படும் மாணவர்கள் வேலைவாய்ப்பு மையம், சென்னை யுரேகா போர்ப்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

    கல்லூரி முதல்வர் சீ.மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். துணை முதல்வர் சு.சக்கரவர்த்தி, முதுகலை நிறுவன செயலரியல் துறைத் தலைவர் சு.நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு அலுவலர் பேரா.இ.ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை யுரேகா போர்ப்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் ராஜேஷ், கிளை மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், வரலாற்றுப் பேராசிரியர் கலைநேசன், பொருளியல் துறைப் பேராசிரியர் அ.சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai