Enable Javscript for better performance
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்

    By திருவள்ளூர்  |   Published on : 06th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர் பி.எம்.கமலம்மா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர் பி.எம்.கமலம்மா, உதவி இயக்குநர் ராமசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் முன்னிலையில் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், புகார்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு ஆய்வு செய்யப்பட்டது.இதையடுத்து, ஆதிதிராவிடர் இன மக்கள், அமைப்புகள் சார்பில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை உறுப்பினர் பெற்று அவற்றை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

    தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஆதிதிராவிடர் இன அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள், ஆதிதிராவிடர் அமைப்புகளைச் சார்ந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர்கள், மக்கள் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்குரிய பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

    மேலும், மத்திய மாநில அரசுகள் ஆதிதிராவிடர் இன மக்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிதிகள் குறித்தும், இந்த நிதிகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பல்வேறு துறைத் தலைவர்கள் வாயிலாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

    திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மக்களிடமிருந்து கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 60 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நகரப்பகுதிகளிலிருந்து 2 வழக்குகளும் மீதமுள்ள அனைத்து வழக்குகளும் கிராமப் பகுதிகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. இதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பணபயன் வழங்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு பெறபட்ட பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

    இதுகுறித்து உரிய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். தாட்கோ திட்டத்தின் வாயிலாக 2013-14-ஆம் ஆண்டுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருந்தும் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு என கல்லூரியோ, விடுதியோ இல்லை. தனிநபர் கழிவறை கட்டுவதற்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் ரூ.11 ஆயிரம் போதியதாக இல்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    மத்திய, மாநில அரசுகள், ஆதிதிராவிடர் இன மக்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிதிகளை முழுமையாக ஆதிதிராவிடர் இன மக்களுக்கு வழங்கி அவர்களை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

    மாவட்ட எஸ்.பி. சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காசி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் குமார், மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் கருணாநிதி, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai