சுடச்சுட

    

    இருப்புப் பாதையிலிருந்து தடம்புரண்ட ஆய்வு வாகனம்

    By பொன்னேரி,  |   Published on : 06th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாள ஆய்வு வாகனம் தடம்புரண்டதால் ரயில்கள் தாமதமாகச் சென்றன.

    சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு வாகனத்தில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.

    பொன்னேரி ரயில்வே கேட் அருகே வந்தபோது, அந்த ஆய்வு வாகனம் இருப்புப் பாதையிலிருந்து விலகி சற்று கீழே இறங்கியது.

    இதையடுத்து, விபத்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, ஆய்வு வாகனம் மீண்டும் இருப்புப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai