சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே உள்ள இலுப்பூர் ஊராட்சியில் இரு காலனி மக்களுக்கு இடையே பொது வழி ஏற்படுத்தி தர வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர் கமலம்மாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கமலம்மாவிடம் இலுப்பூர் ஊராட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ் அளித்த கோரிக்கை மனு: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட இலுப்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. இந்நிலையில், இலுப்பூர் ஊராட்சியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் இருந்தும் வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகத்தினர் முன்வரவில்லை. மேலும் இங்கு இரு காலனிகளில் வசித்து வரும் மக்களுக்கிடையே பொதுவழி இல்லாததால், தனியார் நிலங்களின் வழியாகவே தற்போது அவர்கள் சென்றுவர வேண்டியுள்ளது. இதனைத் தடுப்பதற்காக, அந்த நிலங்களின் உரிமையாளர்கள் அந்த வழியை மறித்து வேலி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனவே, இலுப்பூர் ஊராட்சியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கவும், இரு காலனிகளுக்கு இடையே பொதுவழியும் ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai