சுடச்சுட

    

    திருநிலை கிராமத்தைச் சேர்ந்த பெண்களை மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் தகாத வார்தைகளால் திட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொன்னேரி துணைக் காவல் கண்காணிப்பாளர் எட்வர்ட்டிடம் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர். மனுவில் உள்ள விவரம்: விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகறாறு காரணமாக திருநிலை கிராமத்தில் உள்ள ஒரு சிலர் மீது பெரியமுல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர்.

    இந்நிலையில் மேற்கண்ட வழக்கு விசாரணைக்காக திருநிலை கிராமத்துக்கு வந்த மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் கிராமத்தில் உள்ள பெண்களை இழிவாக பேசிவிட்டு சென்றுள்ளார்.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai