சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 06th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : கும்மிடிப்பூண்டி அருகே வேற்காடு பகுதியில் அடுத்தடுத்த இரு கடைகளில் மர்ம நபர்கள் ரூ.3 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனர்.

    வேற்காடு பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் கும்மிடிப்பூண்டி மேலக்கழனி பகுதியைச் சேர்ந்த கணபதி (25) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், வழக்கம்போல் இவர் வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அவரது கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த ஜெராக்ஸ் கருவி, கடையில் இருந்த 10 செல்போன்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இதன் பின்னர், அந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள புழல் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமான வாகன உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.84 ஆயிரம் மதிப்பிலான "கம்பிரஷர்' இயந்திரம் உள்ளிட்ட உதிரிப்பாகங்களை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்த புகார்களின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai