சுடச்சுட

    

    நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

    By திருவள்ளூர்  |   Published on : 06th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் காமுந சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    பள்ளியின் பெற்றோர் } ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீபன் சற்குணம் தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில் வரவேற்றார்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் திரிலோகச் சந்தர், இந்நாள் தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணி, ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கர் பங்கேற்று ஆசிரியர் தின விழா குறித்தும், டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்தும் மாணவர்களிடையே பேசினார்.

    இதனைத்தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களான பழனி, பாலகிருஷ்ணன், செந்தில், ஆனந்த், அனிதா, மங்கையர்கரசி, பார்வையற்ற ஆசிரியை சுகுனசுந்தரி, வசந்தி, ரெபேகா, பாஸ்கர் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai