சுடச்சுட

    

    போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

    By திருவள்ளூர்,  |   Published on : 06th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் தலைமை வகித்தார்.

    முகாமில் தமிழ்நாடு "போலீஸ் டிராபிக் வார்டன்' குழுவினர் பங்கேற்று சாலை விதிகள் குறித்தும், போக்குவரத்தின்போது சிக்னல் செய்யும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    சாலைகளில் செல்லும் பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், போக்குவரத்து சீரமைப்பில் மாணவர்கள் ஈடுபடும்போது அவர்கள் கையாளும் வழிமுறைகள் குறித்தும் இதில் விளக்கிக் கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு டிராபிக் வார்டன் குழுவைச் சேர்ந்த செல்வன், ஸ்ரீதர்குமார், ஷாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியைகள் ரோஸ்லின், கவிதா கந்தசாமி ஆகியோர் நன்றி கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai