சுடச்சுட

  

  சதாசிவ லிங்கேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை யோக சனிபகவானுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் அமைந்துள்ளது மனோன்மணி உடனுறை சதாலிங்கேஸ்வரர் கோயில்.

  இந்தக் கோயில் வளாகத்தில் புதிதாக, யோக சனிபகவான், சூரியனார், விஷ்ணுதுர்கை, திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில், ஒரு யாக சாலை, 108 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம் உள்பட நான்கு கால யாக பூஜை நடந்தது. காலை, 7.30 மணிக்கு சனிபகவானுக்கு பரிகார ஹோமம், மகா தீபாராதனை நடந்தது.

  காலை, 9 மணிக்கு கலச பூஜையும், அதைத் தொடர்ந்து கலச ஊர்வலம் நடந்தது. காலை, 10 மணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட சிலைகள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

  இரவு 7.30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்தார். விழாவில், திருத்தணி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai