சுடச்சுட

    

    2016-ஆம் ஆண்டில் அன்புமணி ராமதாஸை முதல்வராக்க வேண்டும்

    By திருவள்ளூர்,  |   Published on : 06th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவை பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறச் செய்து அன்புமணி ராமதாûஸ தமிழக முதல்வராக்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச்செயலர் ரவிராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர் சிவ.கோவிந்தராஜ் வரவேற்றார்.

    மாநில நிர்வாகிகள் வ.பாலயோகி, கே.என்.சேகர், நா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று பேசியது:

    வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வேண்டும். மனித வளம் மேம்பாடு அடைய கல்வி வளர்ச்சி அவசியம். இந்தியா முழுவதும் சமச்சீர் கல்வி வேண்டும். ஏழை மக்கள் நலன்கருதி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு கல்லூரிகள் தொடங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7.20 கோடி பேரில் 2.50 கோடி வன்னியர்கள் உள்ளனர். அவர்களை அனைத்து சமுதாய மக்களும் ஆதரிக்கின்றனர்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தால் அதில் 6 முதல் 7 தொகுதிகளை பாமகவினர் கைப்பற்ற வேண்டும். மீதமுள்ள 3 தொகுதிகளை பாமகவை கூட்டணிக்கு நாடும் அல்லது கூட்டணியில் உள்ள கட்சியினர் கைப்பற்ற வேண்டும்.

    நமக்கு முறையாக நமக்கு வழிகாட்ட ராமதாஸ் உள்ளார். அவர், தனது கொள்கைகளை வெளியிடும் முன்பாகவே அதனை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் அன்புமணி ராமதாஸýக்கு உண்டு. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு தொகுதிக்கு 75 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அதில் அனைத்து சமுதாய மக்களும் இடம்பெற வேண்டும்.

    அந்த உறுப்பினரர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும். இந்த செயலை நீங்கள் செய்துவிட்டால் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வராவது உறுதி என்றார் அவர்.

    திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்கள், தினேஷ்குமார், குணா, சேகர், அனந்தகிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

    கடம்பத்தூர் ஒன்றியச் செயலர் விஜயராகவன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai