சுடச்சுட

    

    அரசு நீர்​வ​ரத்​துக் கால்​வாய்​கள் ஆக்​கி​ர​மிப்பு:​ ிராம மக்​கள் நாளை ஆர்ப்​பாட்​டம்

    Published on : 07th September 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காசி​நா​த​பு​ரம் கிரா​மத்​தில் அரசு நீர்​வ​ரத்துக் கால்​வாயை ஆக்​கி​ர​மிப்பு செய்த தனி நபர்​கள் மீது நட​வ​டிக்கை எடுக்​காத வட்​டாட்​சி​ய​ரைக் கண்​டித்து திங்​கள்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் ஆர்ப்​பாட்​ட​மும்,​​ குடும்ப அட்டை,​​ வாக்​கா​ளர் அட்​டை​களை ஒப்​ப​டைக்​க​வும் கிராம மக்​கள் முடிவு செய்​துள்​ள​னர்.​

    திருத்​தணி ஒன்​றி​யம்,​​ பட்​டா​பி​ரா​மா​பு​ரம் ஊராட்​சிக்​குள்​பட்​டது காசி​நா​த​பு​ரம் கிரா​மம்.​ இந்​தக் கிரா​மத்​தில் 100-க்கும் மேற்​பட்ட குடும்​பத்​தி​னர் வசித்து வரு​கின்​ற​னர்.​

    அந்​தக் கிரா​மத்​தைச் சேர்ந்த ஒரு​வர்,​​ நிலத்தை வீட்​டு​ம​னை​க​ளா​கப் பிரிக்​கும்​போது,​​ அரசு நீர்​வ​ரத்து கால்​வா​யை​யும் சேர்த்து மனை​யா​கப் பிரித்து,​​ அரசு அனு​மதி பெறா​மல் விற்​பனை செய்து வரு​வ​தாக கூறப்​ப​டு​கி​றது.​

    அதே​போல காசி​நா​த​பு​ரம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வ​ரும்,​​ அரசு நீர்​வ​ரத்​துக் கால்​வா​யை​யும் சேர்த்து முள்வேலி அமைத்து நிலத்தை ஆக்​கி​ர​மிப்பு செய்​துள்​ள​தாக கூறப்​ப​டு​கி​றது.​ இது​கு​றித்து திருத்​தணி வரு​வாய் கோட்​டாட்​சி​யர்,​​ வட்​டாட்​சி​ய​ரி​டம் அரசு புறம்​போக்கு நிலத்தை மீட்​கு​மாறு 5 முறை கிராம மக்​கள் மனு​கொ​டுத்​துள்​ள​னர்.​

    ஆனால் நட​வ​டிக்கை ஏதும் எடுக்​கா​மல் அதி​கா​ரி​கள் மெத்​த​னம் காட்டி வந்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ பின்​னர் கிராம மக்​கள் ஏற்​கெ​னவே கால்​வா​யில் இருந்த "சக்தி கல்லை' அகற்றி புதி​தாக ரூ.3 லட்​சத்​தில் சுவா​மியை பிர​திஷ்டை செய்து வணங்கி வரு​கின்​ற​னர்.​

    இந்​நி​லை​யில் அரசு நிலத்தை ஆக்​கி​ர​மிப்பு செய்த தனி​ந​பர் கொடுத்த மனு​வின் மீது வட்​டாட்​சி​யர் உரிய நட​வ​டிக்கை எடுத்து,​​ ஜே.சி.பி.​ இயந்​தி​ரம் மூலம் கிராம மக்​கள் வணங்கி வந்த "சக்தி கல்லை' அகற்​றி​னார்.​

    இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து கிராம மக்​கள் திங்​கள்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன்பு ஆர்ப்​பாட்​ட​மும்,​​ குடும்ப அட்டை,​​ வாக்​கா​ளர் அட்டை ஆகி​ய​வற்றை ஒப்​ப​டைக்​க​வும் முடிவு செய்​துள்​ள​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai