சுடச்சுட

    

    அர​சுப் பள்ளி ஆசி​ரி​யர்​கள் கௌ​ர​விப்பு

    By கும்​மி​டிப்​பூண்டி  |   Published on : 07th September 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது​கும்​மி​டிப்​பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்த 3 அர​சுப் பள்ளி ஆசி​ரி​யர்​கள்,​​ 2 அங்​கன்​வா​டிப் பணி​யா​ளர்​கள்,​​ ஆசி​ரி​யர் தின விழாவை ஒட்டி வெள்​ளிக்​கி​ழமை கௌ​ர​விக்​கப்​பட்​ட​னர்.​

    புது​கும்​மி​டிப்​பூண்டி ஊராட்சி மன்​றம்,​​ புது​கும்​மி​டிப்​பூண்டி அரசு உயர்​நி​லைப் பள்ளி பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்​கத்​தி​னர் நடத்​திய விழா​வுக்கு,​​ ஊராட்சி மன்​றத் தலை​வர் மா.செல்​வ​ராஜ் தலைமை தாங்​கி​னார்.​

    பள்​ளி​யின் பெற்​றோர் ஆசி​ரி​யர் கழ​கத் தலை​வ​ரான ஒன்​றிய கவுன்​சி​லர் கண​பதி முன்​னிலை வகித்​தார்.​ பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் வெங்​க​டே​சன் வர​வேற்​றார்.​

    நிகழ்​வில் சிறப்பு அழைப்​பா​ள​ராக திரு​வள்​ளூர் மாவட்ட அதி​முக செய​லா​ளர் சிறு​ணி​யம் பல​ரா​மன்,​​ மாவட்ட ஊராட்​சித் தலை​வர் பி.ரவிச்​சந்​தி​ரன்,​​ மாவட்ட கவுன்​சி​லர் கோவி.நாரா​ய​ண​மூர்த்தி,​​ ஒன்​றிய அதி​முக செய​லா​ளர் கோபால்​நா​யுடு,​​ மாவட்ட அதி​முக துணைச் செய​லா​ளர் அபி​ரா​மன் உள்​ளிட்​டோர் ஆசி​ரி​யர்​களை வாழ்த்​திப் பேசி​னர்.​

    தொடர்ந்து விழா​வில் புது​கும்​மி​டிப்​பூண்டி அரசு உயர்​நி​லைப் பள்ளி,​​ புது​கும்​மி​டிப்​பூண்டி ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி,​​ கரும்​புக்​குப்​பம் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி ஆசி​ரி​யர்​கள்,​​ புது​கும்​மி​டிப்​பூண்டி ஊராட்​சி​யில் உள்ள அங்​கன்​வா​டி​க​ளில் பணி​யாற்​று​ப​வர்​கள் கௌ​ர​விக்​கப்​பட்டு அவர்​க​ளுக்கு நினை​வுப் பரி​சு​கள் வழங்​கப்​பட்​டது.​

    செங்​குன்​றத்​தில்...​

    ​​செங்​குன்​றம்,​​ செப்.​ 6:​ செங்​குன்​றம் காம​ரா​ஜர் நக​ரில் உள்ள நேஷ​னல் லோட்​டஸ் மேல்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​யர் தின விழா நடை​பெற்​றது.​ இந்த விழா​வின் போது மாணவ,​​ மாண​வி​க​ளுக்​கான பட்​டி​மன்​றம் நடை​பெற்​றது.​

    பள்​ளிச் செய​லா​ளர் சின்​னப்​பை​யன் தலைமை தாங்​கி​னார்.​ தாளா​ளர் அருண்​கி​ருஷ்​ணன்,​​ பள்​ளி​யின் கல்வி மேலாண்மை இயக்​கு​நர் ஏ.அகிலா ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​

    பள்ளி முதல்​வர் மர​க​தம் சந்​தி​ர​சே​கர் வர​வேற்​றார்.​ பள்​ளிக் குழு​மத் தலை​வர் அரு​ணாச்​ச​லம் தலை​மை​யில் "ஆசி​ரி​யர் பணி வேலையா?​ சேவையா?​' என்ற தலைப்​பில் பட்​டி​மன்​றம் நடந்​தது.​

    இதில் ஆசி​ரி​யர்​க​ளும்,​​ மாணவ,​​ மாண​வி​க​ளும் கலந்து கொண்​ட​னர்.​ சர்​வ​பள்ளி ராதா​கி​ருஷ்​ணன் வாழ்க்கை வர​லாற்றை தமி​ழா​சி​ரி​யர் ரமேஷ் விளக்​கி​னார்.​

    ஆசி​ரி​யர் அரேந்​தி​ர​சந்த் நன்றி கூறி​னார்.​ அனைத்து ஆசி​ரி​யர்​க​ளுக்​கும் பள்ளி சார்​பில் இனிப்​பு​கள் வழங்​கப்​பட்​டன.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai