Enable Javscript for better performance
உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்தை விதி​மு​றை​கள்:​ அர​சி​யல் கட்​சி​யி​ன​ருக்கு ஆட்​சி​யர் விளக்​கம்- Dinamani

சுடச்சுட

  

  உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்தை விதி​மு​றை​கள்:​ அர​சி​யல் கட்​சி​யி​ன​ருக்கு ஆட்​சி​யர் விளக்​கம்

  Published on : 07th September 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நடை​பெ​ற​வுள்ள உள்​ளாட்சி அமைப்​பு​க​ளுக்​கான தேர்த​லில் அர​சி​யல் கட்​சி​யி​னர் பின்​பற்ற வேண்​டிய நடை​மு​றை​களை வியா​ழக்​கி​ழமை நடை​பெற்ற கூட்​டத்​தில் ஆட்​சி​யர் கொ.​ வீர​ரா​க​வ​ராவ் விளக்​கி​னார்.​

  திரு​வள்​ளுர் மாவட்​டத்​தில் உள்ள நகர்ப்​புற,​​ ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​க​ளில் ஏற்​பட்​டுள்ள காலி பத​வி​யி​டங்​க​ளுக்​கான தேர்​தல் வரும் 18-ஆம் தேதி நடை​பெ​ற​வுள்​ளது.​ இதை​யொட்டி அதற்​கான நன்​ன​டத்தை விதி​கள் குறித்த அர​சி​யல் கட்​சி​யி​ன​ரு​ட​னான ஆலோ​ச​னைக் கூட்​டம் ஆட்​சி​யர் அலு​வ​லக கூட்​ட​ரங்​கில் நடை​பெற்​றது.​

  இக்​கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் பேசி​யது:​ "மாதிரி நன்​ன​டத்தை விதி​கள் குறித்த விவ​ரம் வேட்​பா​ளர்​க​ளுக்கு வழங்​கப்​ப​டும்.​

  தேர்​தல் நடத்​து​வது தொடர்​பாக வேட்​பா​ளர்,​​ அவர்​க​ளது முக​வர்​க​ளுக்கு குறிப்​பி​டத்​தக்க புகார்,​​ பிரச்னை ஏதும் இருந்​தால் அவர்​கள் மாநி​லத் தேர்​தல் ஆணை​யத்​தால் நிய​மிக்​கப்​பட்​டுள்ள தேர்​தல் பார்​வை​யா​ள​ரி​டம் தெரி​விக்​க​லாம்.​

  மாதிரி நன்​ன​டத்தை விதி​கள் அம​லுக்கு வந்​த​வு​டன் சாதா​ர​ணத் தேர்த​லின்​போது உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​க​ளின் அலு​வ​லக வாக​னங்​கள் அனைத்​தும் மாவட்ட அலு​வ​ல​ரி​ட​மும் ஒப்​ப​டைக்க வேண்​டும்.​

  தற்​செ​யல் தேர்த​லின்​போது உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​கள் அவர்​க​ளுக்கு வழங்​கப்​பட்​டுள்ள வாக​னங்​களை மாதிரி நன்​ன​டத்தை விதி​கள் நடை​மு​றை​யில் உள்ள பகு​தி​க​ளில் பயன்​ப​டுத்த முற்​றி​லும் தடை செய்​யப்​ப​டும்.​

  வாக்​குச் சாவ​டியி​லி​ருந்து 200 மீட்​டர் தொலை​வுக்கு அப்​பால் தேர்​தல் ஆத​ரவு கோரக் கூடாது.​

  கூட்​டங்​கள் நடத்த உரிய அனு​மதி பெற வேண்​டும்.​ தேர்​தல் நடத்​தும் அலு​வ​ல​ரி​ட​மி​ருந்து உரிய அனு​ம​திச் சீட்டு பெறா​மல் எந்த நப​ரும் வாக்​குச்​சா​வ​டிக்​குள் நுழை​யக் கூடாது.​

  உள்​ளாட்​சித் தேர்​தல்​கள் எந்​தெந்​தப் பகு​தி​க​ளில் நடை​பெ​று​கி​றதோ அந்​தந்​தப் பகு​தி​க​ளுக்கு மட்​டுமே மாதிரி தேர்​தல் நன்​ன​டத்தை விதி​கள் பொருந்​தும்.​

  திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் காலி​யாக உள்ள 68 பத​வி​க​ளுக்கு தேர்​தல் நடை​பெ​ற​வுள்​ளது.​

  செப்​டம்​பர் 8-ஆம் தேதி பிற்​ப​கல் 3 மணி வரை வேட்பு மனுக்​கள் மீது பரி​சீ​லனை செய்​யப்​ப​டும்.​ அப்​போது மனு​தா​ரர்​கள் தங்​கள் மனுக்​களை திரும்​பப் பெற​லாம்.​ ​

  செப்​டம்​பர் 18-ஆம் தேதி 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்​குப் பதிவு நடை​பெ​றும்.​

  செப்​டம்​பர் 22-ஆம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது.​

  தேர்​தல் சிறப்​பாக நடை​பெ​று​வ​தைக் கண்​கா​ணிக்க தேர்​தல் பார்​வை​யா​ளர்​க​ளாக துணை ஆட்​சி​யர்,​​ நக​ராட்சி ஆணை​யர்,​​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் நிலை​யில் நிய​மிக்​கப்​பட்டு தேர்​தல் மாதிரி நன்​ன​டத்தை விதி​கள் பின்​பற்​றப்​ப​டு​வ​தைப் பார்​வை​யிட உள்​ள​னர்.​

  தேர்​தல் சுதந்​தி​ர​மா​க​வும்,​​ நியா​ய​மா​க​வும்,​​ ஒழுங்​கா​க​வும்,​​ அமை​தி​யா​க​வும் நடை​பெற ​

  மாவட்ட நிர்​வா​கம் அனைத்​துப் பணி​க​ளை​யும் போர்​கால அடிப்​ப​டை​யில் மேற்​கொண்​டுள்​ளது.​

  அனைத்து அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட அர​சி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​க​ளும் மாதிரி நன்​ன​டத்தை விதி​மு​றை​க​ளைப் பின்​பற்றி தேர்​தல் சுமு​க​மாக நடை​பெற ஒத்​து​ழைப்பு நல்க வேண்​டும்' என்​றார்.​

  இந்​தக் கூட்​டத்​தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்​கு​நர் குமார்,​​ உதவி இயக்​கு​நர் லஷ்​மண்,​​ ஆட்​சி​ய​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் நக்​கீ​ரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai