சுடச்சுட

    

    கார் கண்​ணா​டியை உடைத்து ரூ.7 லட்​சம் திருட்டு

    By ஸ்ரீபெ​ரும்​பு​தூர்,​​  |   Published on : 07th September 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெ​ரும்​பு​தூர் பேருந்து நிலை​யத்​தில் நிறுத்தி வைத்​தி​ருந்த காரின் கண்​ணா​டியை உடைத்து ரூ.7.5 லட்​சத்தை திரு​டிச் சென்ற மர்ம நபர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​ற​னர்.​

    திரு​வள்​ளூர் மாவட்​டம்,​​ உளுந்தை கிரா​மத்​தில் பூந்​த​மல்லி-​ பேரம்​பாக்​கம் சாலை​யில் பிவிசி பைப்​பு​கள் உற்​பத்தி செய்​யும் தனி​யார் தொழிற்​சாலை இயங்கி வரு​கி​றது.​ இந்​தத் தொழிற்​சா​லை​யில் திரு​வா​லங்​காடு பகு​தி​யைச் சேர்ந்த நரேஷ்​கு​மார் ​(30),​ கடந்த 5 ஆண்​டு​க​ளாக ஓட்​டு​ந​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​

    இந்த நிலை​யில் தொழிற்​சாலை நிர்​வா​கத்​தி​னர் ஓட்​டு​நர் நரேஷ்​கு​மா​ரி​டம்,​​ ஸ்ரீபெ​ரும்​பு​தூர் பகு​தி​யில் உள்ள வங்​கிக்​குச் சென்று நிர்​வா​கத்​துக்​குத் தேவை​யான பணப் பரி​மாற்​றம் செய்து வழக்​கம்.​

    இந்த நிலை​யில் தொழிற்​சா​லை​யில் பணி​பு​ரி​யும் தொழி​லா​ளர்​க​ளுக்கு கடந்த மாதத்​துக்​கான சம்​ப​ளம் வழங்​கு​வ​தற்​காக நரேஷ்​கு​மா​ரி​டம் ரூ.​ 7.5 லட்​சத்​துக்​கான காசோ​லையை கொடுத்து அதைப் பண​மாக மாற்றி வரும்​படி கூறி​யுள்​ள​னர்.​

    இதை​ய​டுத்து நரேஷ்​கு​மார் சனிக்​கி​ழமை காலை தொழிற்​சா​லைக்​குச் சொந்​த​மான காரை எடுத்​துக் கொண்டு ஸ்ரீபெ​ரும்​பு​தூர் பகு​தி​யில் உள்ள தனி​யார் வங்​கிக்கு வந்து காசோ​லையை மாற்றி ரூ.​ 7.5 லட்​சத்​தைப் பெற்​றுக் கொண்டு பணத்தை காரில் வைத்​து​விட்​டார்.​

    பின்​னர் காரை ஸ்ரீபெ​ரும்​பு​தூர் பேருந்து நிலை​யம் அருகே நிறுத்​தி​விட்டு தொழிற்​சா​லைக்​குத் தேவை​யான எழு​துப் பொருள்​கள் வாங்க அரு​கில் உள்ள கடைக்​குச் சென்​றுள்​ளார்.​

    பின்பு திரும்பி வந்து பார்த்​த​போது காரின் இட​துப் பக்க முன்​பக்க கண்​ணாடி உடைக்​கப்​பட்டு அதி​லி​ருந்த ரூ.​ 7.50 லட்​சம் திரு​டப்​பட்​ட​தைக் கண்டு அதிர்ச்​சி​ய​டைந்​தார்.​

    இது​கு​றித்து ஸ்ரீபெ​ரும்​பு​தூர் காவல் நிலைத்​தில் புகார் தெரி​வித்​துள்​ளார்.​ புகா​ரின் பேரில்,​​ ஸ்ரீபெ​ரும்​பு​தூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து பணத்தை திரு​டிச் சென்ற மர்ம நபர்​க​ளைத் தேடி வரு​கின்​ற​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai