சுடச்சுட

  

  திருத்​த​ணி​யில் இந்​தி​யா​வின் முன்​னாள் குடி​ய​ர​சுத் தலை​வர் டாக்​டர் ராதா​கி​ருஷ்​ணன் பிறந்​த​நாள் விழா வெள்​ளிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​

  திருத்​தணி ம.பொ.சி.​ சாலை​யில் உள்ள டாக்​டர் ராதா​கி​ருஷ்​ணன் அரசு நடு​நி​லைப் பள்​ளி​யில் நடை​பெற்ற இந்த விழா​வுக்கு மாவட்ட கல்வி அலு​வ​லர் நேரு ​(பொறுப்பு)​,​​ நகர்​மன்​றத் தலை​வர் டி.சௌந்​தர்​ரா​ஜன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​ ​

  இதில் சிறப்பு அழைப்​பா​ளர்​க​ளாக மாவட்ட ஆட்​சி​யர் கொ.வீர​ரா​க​வ​ராவ்,​​ அரக்​கோ​ணம் மக்​க​ளவை உறுப்​பி​னர் திருத்​தணி கோ.அரி ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.​

  விழா​வில் மாவட்​டத்​தில் உள்ள 14 ஒன்​றி​யங்​க​ளில் சிறப்​பாக பணி​பு​ரி​யும் ஆசி​ரி​யர்​கள் 40 பேருக்கு நல்​லா​சி​ரி​யர் விருது வழங்​கப்​பட்​டது.​

  திருத்​தணி அர​சி​னர் மக​ளிர் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் டாக்​டர் ராதா​கி​ருஷ்​ண​னின் உரு​வப்​ப​டத்​துக்கு உத​வித் தலைமை ஆசி​ரி​யர் ஜெய​சந்​தி​ரன் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.​

  திருத்​தணி சட்​டப்​பே​ரவை உறுப்​பி​னர் மு.அருண்​சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ நகர்​மன்​றத் துணைத்​த​லை​வர் மாசி​லா​மணி,​​ ஒன்​றி​யக்​கு​ழுத் தலை​வர் இ.என்.கண்​டிகை எ.ரவி,​​ துணைத்​த​லை​வர் எல்.தாண்​ட​வ​ரா​யன் உள்​ளிட்​டோர் இதில் கலந்து கொண்​ட​னர்.​

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai