சுடச்சுட

    

    தனி​யார் நிறு​வ​னத் தொழி​லா​ளர்​கள் போராட்​டம்

    By பொன்​னேரி  |   Published on : 07th September 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனி​யார் ஒப்​பந்த நிறு​வ​னத்​தி​ட​மி​ருந்து இழப்​பீட்​டுத் தொகை பெற்​றுத்​த​ரக் கோரி பொன்​னேரி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் முன்பு தொழி​லா​ளர்​கள் வெள்​ளிக்​கி​ழமை போராட்​டம் நடத்​தி​னர்.​

    பொன்​னேரி வட்​டம்,​​ வல்​லூர் கிரா​மத்​தில் உள்ள அனல் மின் நிலை​யத்​துக்கு நிலக்​கரி,​​ கட​லில் இருந்து நீரைக் கொண்டு செல்​வ​தற்கு எண்​ணூர் அருகே உள்ள பக்​கிங்​காங் கால்​வாய் மீது 2009-ஆம் ஆண்டு பாலம் கட்​டும் பணி​கள் தொடங்​கப்​பட்​டன.​

    அப்​போது,​​ பாலம் கட்​டும் பணியை மேற்​கொண்ட தனி​யார் ஒப்​பந்த நிறு​வ​னத்​தில் 43 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்​கப்​பட்​டது.​

    பாலம் கட்​டும் பணி​கள் 2012-ஆம் ஆண்டு முடி​வ​டைந்​ததை அடுத்து,​​ அங்கு பணி​பு​ரிந்த 43 பேரும் வேலை​யில் இருந்து நிறுத்​தப்​பட்​ட​னர்.​

    இதை​ய​டுத்து,​​ மீண்​டும் தங்​க​ளுக்கு வேலை வழங்​கக்​கோரி தொழி​லா​ளர் தரப்​பில் கோட்​டாட்​சி​ய​ரி​டம் மனு அளிக்​கப்​பட்​டது.​

    இத​னைத்​தொ​டர்ந்து,​​ பொன்​னேரி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வட்​டாட்​சி​யர் தலை​மை​யில் கடந்த ஜூன் மாதம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது.​ இதில் 43 தொழி​லா​ளர்​க​ளுக்கு சட்​டப்​ப​டி​யான இழப்​பீட்​டுத் தொகை வழங்​கு​வ​தாக தனி​யார் ஒப்​பந்த நிறு​வ​னம் உறுதி அளித்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​

    இந்​நி​லை​யில்,​​ மூன்று மாதங்​கள் கடந்​தும் இழப்​பீட்​டுத் தொகை ​ வழங்​கப்​ப​ட​வில்லை.​

    இத​னைக் கண்​டித்​தும்,​​ இழப்​பீட்​டுத் தொகை வழங்​கக் கோரி​யும் மீஞ்​சூர் பொதுத் தொழி​லா​ளர் சங்​கத்​தைச் சேர்ந்த 50-க்கும் மேற்​பட்ட தொழி​லா​ளர்​கள் பொன்​னேரி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் முன்பு போராட்​டம் நடத்​தி​னர்.​

    தக​வ​ல​றிந்து அங்கு வந்த மண்​ட​லத் துணை வட்​டாட்​சி​யர் அன்​பு​செல்​வன்,​​ பொன்​னேரி காவல் ஆய்​வா​ளர் சர்​தார் ஆகி​யோர் ​ பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தை​ய​டுத்து போராட்​டம் கைவி​டப்​பட்​டது.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai