Enable Javscript for better performance
புட்​லூர் ரயில் நிலை​யத்​தில் குடி​நீர்,​​ மின்​வி​ளக்​கு​கள் தேவை- Dinamani

சுடச்சுட

    

    புட்​லூர் ரயில் நிலை​யத்​தில் குடி​நீர்,​​ மின்​வி​ளக்​கு​கள் தேவை

    By திரு​வள்​ளூர்,​​  |   Published on : 07th September 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரு​வள்​ளூரை அடுத்த புட்​லூர் ரயில் நிலை​யத்​தில் பய​ணி​க​ளுக்கு குடி​நீர் வச​தி​யும்,​​ மின் விளக்​கு​கள் வச​தி​யும் ஏற்​ப​டுத்​தித் தர வேண்​டும் என பய​ணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.​

    திரு​வள்​ளூரை அடுத்​துள்​ளது புட்​லூர் ரயில் நிலை​யம்.​ இந்த ரயில் நிலை​யத்​தில் காக்​க​ளூர்,​​ புட்​லூர்,​​ ராமா​பு​ரம்,​​ காக்​க​ளூர் தொழிற்​பேட்டை ஆகிய பகு​தி​க​ளில் வசிக்​கும் மக்​கள் வந்து செல்​கின்​ற​னர்.​ இந்த ரயில் நிலை​யத்​தில் பய​ணி​க​ளுக்​குத் தேவை​யான அடிப்​படை வச​தி​கள் ஏதும் இல்லை.​ குடி​நீர் குழாய் அமைக்​கப்​பட்​டும் அதில் தண்​ணீர் வரு​வ​தில்லை.​

    மேலும் ரயில் நிலைய நடை​மே​டை​யில் போதிய மின்​சார விளக்​கு​கள் அமைக்​கா​த​தால் இரவு நேரத்​தில் சமூக விரோ​தி​க​ளின் தொல்லை அதி​க​ரித்து வரு​கி​றது.​

    மேலும் ரயில்வே நடை​மேம்​பா​லம் புற​ந​கர் ரயில்​கள் செல்​லும் 2 தண்​ட​வா​ளங்​களை மட்​டும் இணைக்​கும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளது.​

    அந்த நடை மேம்​பா​லத்தை நீட்​டிக்க வேண்​டும்.​ இது​போன்ற பல அடிப்​படை வச​தி​களை புட்​லூர் ரயில் நிலை​யத்​தில் ரயில்வே நிர்​வா​கத்​தி​னர் செய்து தர வேண்​டும் என அந்​தப் பகுதி பொது​மக்​க​ளும்,​​ ரயில் பய​ணி​க​ளும் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai