Enable Javscript for better performance
வட மாநில இளை​ஞர் மயங்கி விழுந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    வட மாநில இளை​ஞர் மயங்கி விழுந்து சாவு

    By திரு​வள்​ளூர்,​​  |   Published on : 07th September 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரு​வள்​ளூர் அருகே இனிப்​பு​கள் தயார் செய்​யும் பிர​பல நிறு​வ​னத்​தில் காவ​லா​ளி​யாக இருந்த வட​மா​நில இளை​ஞர் நிறு​வன வாயி​லில் மயங்கி விழுந்து இறந்த சம்​ப​வம் குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

    திரு​வள்​ளூரை அடுத்த வெள்​ள​வேடு போலீஸ் எல்​லைக்​குள்​பட்ட ஆண்​டர்​சன் பேட்​டை​யில் பிர​பல தனி​யார் இனிப்பு தயார் செய்​யும் தொழிற்​சாலை இயங்கி வரு​கி​றது.​

    இந்த தொழிற்​சா​லை​யில் பீகா​ரைச் சேர்ந்த அஜித்​சிங்​கின் மகன் மனோஜ்​சிங் ​(45) இர​வுக் ​ காவ​லா​ளி​யா​கப் பணி​பு​ரிந்து வந்​தார்.​

    4-ஆம் தேதி இரவு தொழிற்​சா​லைக்​குப் பணி​யில் இருந்த மனோஜ்​சிங் 5-ஆம் தேதி காலை பணி​மு​டிந்து வெளி​யில் வந்து நுழை​வு​வா​யில் கேட் அருகே மயங்கி விழுந்​தார்.​

    அவரை சிகிச்​சைக்​காக "108' ஆம்​பு​லன்ஸ் மூலம் திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​ம​னைக்கு அழைத்து வந்​த​போது மருத்​து​வர்​கள்,​​ அவர் ஏற்​கெ​னவே இறந்து விட்​ட​தாக கூறி​னர்.​

    இந்​தச் சம்​ப​வம் குறித்து சென்​னை​யைச் சேர்ந்த குமார் ​(36) என்​ப​வர் கொடுத்த புகா​ரின்​பே​ரில் வெள்​ள​வேடு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai