சுடச்சுட

    

    செங்​குன்​றம் புள்​ளி​லைன் ஊராட்சி,​​ மாத​வ​ரம் ஆகிய பகு​தி​க​ளில் விநா​ய​கர் சதுர்த்​தி​யை​யொட்டி திரு​வி​ளக்கு பூஜை​கள் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றன.​

    செங்​குன்​றம் புள்​ளி​லைன் ஊராட்சி புது​ந​கர் பகு​தி​யில் உள்ள ஸ்ரீவ​லம்​புரி செல்வ விநா​ய​கர் ஆல​யத்​தில் விநா​ய​கர் சதுர்த்தி விழாவை முன்​னிட்டு,​​ புது​ந​கர் லோட்​டஸ் பள்ளி வளா​கத்​தில் வியா​சர்​பாடி சாரங்​கன் கிருஷ்​ண​வேணி அம்​மாள் ஆன்​மி​கக் குழு​வி​ன​ரின் பக்​திப் ​ பாடல்​க​ளு​டன் நடந்த விளக்கு பூஜை​யில் 300 பெண்​கள் கலந்து கொண்​ட​னர்.​

    மழை வேண்டி நடத்​தப்​பட்ட திரு​வி​ளக்கு பூஜை​கள் 3 மணி நேரம் நடந்​தது.​ புள்ளி லைன் ஊராட்சி மன்​றத் தலை​வர் ஆர்.சுப்​பி​ர​மணி,​​ லோட்​டஸ் பள்​ளித் தாளா​ளர் அரு​ணாச்​ச​லம்,​​ காஞ்சி மண்​ட​லப் போக்​கு​வ​ரத்து செய​லா​ளர் ஆர்.சங்​க​ரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

    இதே​போல,​​ மாத​வ​ரம் மண்​ட​லத்​துக்​குள்​பட்ட பகு​தி​யான மகா​விஷ்ணு நகர் 2-ஆவது தெரு​வில் இந்து முன்​னணி சார்​பில் 100-க்கும் மேற்​பட்ட பெண்​கள் விளக்கு பூஜை​கள் செய்​த​னர்.​

    பொறுப்​பா​ளர் சிவ​பா​ல​சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ சென்னை மாவட்​டச் செய​லா​ளர் சசி​த​ரன்,​​ மாவட்ட பொரு​ளா​ளர் சென்னை சிவா ஆகி​யோர் பூஜை​யைத் தொடங்கி வைத்​த​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai