சுடச்சுட

    

    கும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த பெரு​வாய​லில் உள்ள டி.ஜெ.எஸ்.​ பொறி​யி​யல் கல்​லூ​ரி​யில் அகில பார​திய தெரா​பஞ்ச் இளை​ஞர் இயக்​கம் சார்​பில், உலக சாத​னை​யின் ஒரு கட்​ட​மாக சனிக்​கி​ழமை நடத்​தப்​பட்ட ரத்​த​ தான முகா​மில் 350 மாணவ,​​ ​ மாண​வி​கள் ரத்​த​தா​னம் செய்​த​னர்.​

    ஜைன மதத்​தின் அமைப்​பான இந்த இயக்​கம் சார்​பில்,​​ இந்​தி​யா​வில் 300 நக​ரங்​க​ளில் 700 இடங்​க​ளில் சனிக்​கி​ழமை ரத்​த​தான முகாம் நடத்த ஏற்​பா​டு​கள் செய்​யப்​பட்​டி​ருந்​தன.​ தமி​ழ​கத்​தில் மட்​டும் 80 பகு​தி​க​ளில் ரத்த தான முகாம் நடை​பெற்​றது.​

    உலக சாத​னை​யின் ஒரு கட்​ட​மாக டி.ஜெ.எஸ்.​ பொறி​யி​யல் கல்​லூ​ரி​யில் நடத்​தப்​பட்ட இந்த முகாமை கல்​விக் குழு​மத் தலை​வர் டி.ஜெ.கோவிந்​த​ரா​ஜன் தொடங்கி வைத்​தார்.​

    இந்த முகா​மில்,​​ கல்​லூ​ரி​யைச் சேர்ந்த மாணவ,​​ மாண​வி​கள் திர​ளாக வந்து ரத்த தானம் செய்​த​னர்.​

    முகா​மின் முடி​வில் ரத்த தானத்​தில் பங்​கேற்ற மாண​வர்​க​ளுக்​குச் சான்​றி​தழ்​கள் வழங்​கப்​பட்​டன.​

    தொடர்ந்து 350 பேர் தானம் செய்த ரத்​தம்,​​ அரசு மருத்​து​வ​னை​யின் ரத்த வங்​கி​யில் ஒப்​ப​டைக்​கப்​பட்​டது.​

    முகா​முக்​கான ஏற்​பா​டு​களை அகில பார​திய தெரா​பஞ்ச் இளை​ஞர் இயக்​கத்​தின் நிகழ்ச்சி ஒருங்​கி​ணைப்​பா​ளர்​கள் ராஜு பண்​டாரி,​​ சந்​தோஷ் நாகர்,​​ ராஜேஷ் நாகர்,​​ மனிஷ் நாகர்,​​ நிதேஷ் நாகர்,​​ அனில் பண்​டாரி உள்​ளிட்​டோர் செய்​தி​ருந்​த​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai