சுடச்சுட

    

    திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு கல்லூரியின் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    உலக சமுதாய சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் பங்கேற்று மாணவர்களுக்கு யோகாசனம் குறித்தும், யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.

    கல்லூரியின் மேலாண்மை இயக்குநர் இந்திரா ராஜேந்திரன், கல்லூரியின் முதல்வர் செங்கோட்டையன், செவிலியர் கல்லூரியின் முதல்வர் சாரதா ரமேஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மேலாண்மைத்துறைத் தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai