Enable Javscript for better performance
கார் மீது லாரி மோதி விபத்து: ஆயுதப் படைக் காவலர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கார் மீது லாரி மோதி விபத்து: ஆயுதப் படைக் காவலர் காயம்

    By திருவள்ளூர்  |   Published on : 08th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே ஜே.என்.சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஆயுதப்படைக் காவலர் காயமடைந்தார்.

    திருவள்ளூரை அடுத்த பூங்கா நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. திருவள்ளூர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிகிறார்.

    இவர், ஞாயிற்றுக்கிழமை பகலில் பூங்காநகரில் இருந்து காரில் திருவள்ளூருக்கு வந்தார். அரசு மருத்துவமனை அருகே ஜே.என். சாலையில் சென்றபோது, திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற லாரி, அவரது கார் மீது மோதியது.

    இதில், பலத்த காயமடைந்த ஆயுதப்படைக் காவலர் சத்தியமூர்த்தி,திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிவிட்டார். இதனால், ஜே.என்.சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீஸார் அங்கு வந்து லாரியை சாலையோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai