Enable Javscript for better performance
குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிப்பட்டு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிப்பட்டை அடுத்த பாண்டரவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு (37). விவசாயி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ரோஜா (10) என்ற மகளும், நிஷா என்ற மாதக் குழந்தையும் உள்ளனர்.

    அண்மைக்காலமாக, தேவிக்கும், அவரது கணவர் வேணுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விரக்தியடைந்த தேவி, விஷம் வாங்கி வந்து, குழந்தை நிஷாவுக்கு கொடுத்துள்ளார். ரோஜா விளையாடுவதற்காக வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து தேவியும் விஷம் குடித்தார். இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது. அவர்கள் மயங்கிக் கிடந்த தேவியை மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி தேவி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai