சுடச்சுட

    

    சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

    By திருவள்ளூர்,  |   Published on : 08th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூரில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், பெருமாளுக்கு திருமஞ்சனமும், பிற்பகல் 2 மணியளவில் நாமசங்கீர்த்தனமும் நடைபெற்றது.

    பின்னர், மாலை 4 மணியளவில், சீனிவாசபெருமாள் கோயிலிருந்து சீர்வரிசை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை சீனிவாசபெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai