சுடச்சுட

    

    நெடுஞ்சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் வாகன ஓட்டிகள் அவதி

    By திருவள்ளூர்  |   Published on : 08th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் ஊராட்சியில் நெடுஞ்சாலையோரம் மலை போல் தேங்கியுள்ள குப்பைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது திருப்பாச்சூர் ஊராட்சி.

    இந்த ஊராட்சியில் உள்ள மக்கள், நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இதனை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் மலை போல் குப்பைகள் தேங்கியுள்ளன.

    இந்தக் குப்பைகள் காற்றில் ஆங்காங்கே பறந்து சாலையில் விழுகின்றன. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கனரக வாகனங்கள் செல்லும் வேகத்தில் குப்பைகள் தங்கள் மீது விழுவதைத் தவிர்க்க நினைக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.

    எனவே, வாகன ஓட்டிகளின் அவஸ்தையை தடுக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நெடுஞ்சாலை குப்பையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai