சுடச்சுட

  

  விநாயகர் சதுர்த்தியை விழாவை ஒட்டி, தமிழ்நாடு சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றமும், கிண்டி ரோட்டரி சங்கமும் இணைந்து செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் கேளம்பாக்கம் மருத்துவக் குழுவினரின் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

  இந்த முகாமில் பெண்கள் மருத்துவம், ஈசிஜி, பல் மருத்துவம், தைராய்டு, கண் சிகிச்சை, புற்று நோய் விழிப்புணர்வு, உள்ளிட்ட பிரச்னைகளுக்கு 600-க்கும் மேற்பட்டோருக்கு விளக்கப்பட்டது.

  இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக செட்டிநாடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  இந்த முகாமில் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், சென்னை சிவா, பாரதமாதா மோகன், லட்சுமிபுரம் கலைவாணன், சுந்தரம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai