சுடச்சுட

    

    பி.வி.ரமணாவுக்கு அமைச்சர் பதவி: வெறிச்சோடிக் கிடந்த அலுவலகத்தில் மீண்டும் கட்சியினர் கூட்டம்

    By திருவள்ளூர்,  |   Published on : 08th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பி.வி.ரமணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, வெறிச்சோடிக் கிடந்த அவரது அலுவலகத்தில் தற்போது கட்சியினர் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.வி.ரமணா.

    அப்போது அவருக்கு கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பதிவுத்துறை, வருவாய்த்துறை என முக்கியத் துறைகளில் அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

    மேலும், கட்சியில் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தார்.

    இதையொட்டி, திருவள்ளூரில் உள்ள அவரது அலுவலகத்தில் அமைச்சரைக் காணவும், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அவரது அலுவலகத்தில் மனு அளிக்கவும் கட்சியினர் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த சில தினங்களில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், வருவாய்த்துறை அமைச்சர் பதவியில் இருந்தும் பி.வி.ரமணா நீக்கம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து, அவரது அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் பி.வி.ரமணா நியமிக்கப்பட்டார்.

    ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு, கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பாஸ்கர், ஒன்றியக்குழுத் தலைவர்கள் புட்லூர் சந்திரசேகர், அம்மு மாதவன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    இதையொட்டி, கடந்த சில மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்த திருவள்ளூர் சட்டப்பேரவை அலுவலகம், தற்போது கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வருகையால் ஸ்தம்பித்து

    வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai