சுடச்சுட

    

    திருத்தணி பெரியதெருவில் உள்ள ஸ்ரீ ராமர் பஜனைக் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    தணிகை மீனாட்சியம்மன் கோயிலின் துணைக் கோயிலாக விளங்குவது ஸ்ரீராமர் பஜனைக் கோயில்.

    விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகளும், ஹோமங்களும் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், ராமர் உருவப்படம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதையடுத்து, காலை 6 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கோயில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்குவிழா நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

    ஸ்ரீராமானுஜ பக்த பஜனை சபாவின் பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. விழாவில் 500-க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai