Enable Javscript for better performance
ஆவடியில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆவடியில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

    By அம்பத்தூர்,  |   Published on : 09th September 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆவடியில் 33-வது வார்டுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான உமாமகேஸ்வரி ஆனந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதõ இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    அதன்படி, ஆவடி 33-வது வார்டுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் உமாமகேஸ்வரி ஆனந்தும், பாஜக சார்பில் தரணி உள்பட 9 பேர் களத்தில் இருந்தனர்.

    பாஜக வேட்பாளருக்கு மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.

    இதனிடையே பாஜக வேட்பாளர் தரணி, தன்னை போட்டியிலிருந்து விலகச்சொல்லி மர்ம நபர்கள் மிரட்டுவதாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான 8-ஆம் தேதி காலையில் பாஜக வேட்பாளர் தரணி, ஆவடி தேர்தல் அதிகாரியும், நகராட்சி ஆணையருமான சிவசுப்பிரமணியத்திடம் தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். தொடர்ந்து, களத்தில் இருந்த மற்ற 7 வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்தனர்.

    இதையடுத்து, அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி ஆனந்த், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

    பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியதை அறிந்த ஏராளமான பாஜகவினர், மாலை 4 மணியளவில் ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டோரை கைது செய்தனர்.

    அதிமுகவில் இணைந்தார்... இதனைத்தொடர்ந்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் பிவி.ரமணா முன்னிலையில் பாஜக வேட்பாளர் தரணி, அதிமுகவில் இணைந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai