சுடச்சுட

  

  இரும்பு உருக்காலையில் கொதிகலன் வெடித்து 2 பேர் படுகாயம்

  By கும்மிடிப்பூண்டி  |   Published on : 09th September 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூர் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் திங்கள்கிழமை மாலை கொதிகலன் வெடித்ததில் இரு வடமாநில இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்.

  இந்த ஆலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

  இந்த ஆலையில் திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

  இந்நிலையில் திடீரென கொதிகலன் பகுதியில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக பாய்லர் வெடித்து அதில் இருந்து தீப்பிழம்புகள் வெளியே தெரித்தது.

  இதில் பாய்லர் அருகில் வேலை செய்து கொண்டிருந்த கிரேன் இயக்குபவர்களான பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகேஷ்வரின் மகன் திரேந்தர்(30), உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கைலாஷ் சௌத்ரி மகனின் பட்டு சௌத்ரி (30) பலத்த தீக்காயம் அடைந்தனர்.

  கொதிகலனின் அருகே அந்த நேரத்தில் யாரும் வேலை செய்யாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பாய்லர் வெடித்த காரணத்தால் தொழிற்சாலை வளாகமே தீக்காடானது. எங்கும் புகை மண்டலம் சூழ்ந்ததால் தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

  இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆய்வாளர் குமார் தலைமையில் பாதிரிவேடு போலீஸார் விரைந்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலுசாமி, வருவாய் ஆய்வாளர் தாமோதரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக பெரியபுலியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai