Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலில் குறுக்கு வழியில் வேட்பாளர்கள் தடுக்கப்படுகிறார்கள்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் குறுக்கு வழியில் வேட்பாளர்கள் தடுக்கப்படுகிறார்கள்

    By பூந்தமல்லி  |   Published on : 09th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆளுங்கட்சியினர் குறுக்கு வழியில் தடுத்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டினார்.

    இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போரூர், காரம்பாக்கம், அய்யப்பன்தாங்கள், முகலிவாக்கம், அதன் சுற்றுப் பகுதிகளில் 43 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

    இங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கரைக்க ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று, விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

    தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் உள்ளாட்சி தேர்தலை நேரடியாக சந்திக்க வேண்டும். அதனை விடுத்து, வேட்புமனு தாக்கல் செய்பவர்களை குறுக்க வழியில் தடுக்க ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai